திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Estimated read time 1 min read

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த திருநின்றவூர் பாசியகாரா அறக்கட்டளை சார்பில் திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 15-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்த திருநின்றவூர் பாசியகாரா அறக்கட்டளை சார்பில், பிரம்மோற்சவத்தில் ஏழுமலையானுக்கு பயன்படுத்துவதற்காக 9 திருக்குடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, திருக்குடைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாஸ்கர் பெற்றுக்கொண்டார். மேலும், பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என பக்தர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author