இடைத்தேர்தல்- நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

Estimated read time 1 min read

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அக்கட்சி தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

35. மதுராந்தகம்

கோ.ஜானகிராமன் B.E.,M.B.A.

இளநிலை பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை

101. தாராபுரம்

மு.கார்த்திகா B.E.

இளநிலை பொறியியல்

09. தட்டாஞ்சாவடி (புதுச்சேரி)

ச.கார்த்திக் குமாரி

அழகுக்கலை வல்லுநர்

சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author