எதிர்கால தொழில்களின் வளர்ச்சியில் புதிய முன்னேற்றம் அடைய ஷிச்சின்பிங் அழைப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு ஜனவரி 30ஆம் நாள் எதிர்கால தொழில்களின் வளர்ச்சி குறித்து 24ஆவது பயிலரங்கு நடத்தியது.

இப்பயிலரங்கிற்கு தலைமை தாங்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் கூறுகையில், நாட்டின் ஒப்பீட்டு நன்மைகளைப் பயன்படுத்தி, நிலைத்தன்மையுடன் முன்னேற்றம் அடைந்து, எதிர்கால தொழில்களின் வளர்ச்சியில் புதிய முன்னேற்றங்களைப் தொடர்ச்சியாகப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் நாட்டின் எதிர்கால தொழில்களின் முக்கிய வளர்ச்சித் திசையில் கவனம் செலுத்தி, அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான முன் கணிப்பு திறனை உயர்த்த வேண்டும். பல எதிர்கால தொழில்களின் வளர்ச்சி, தொழில் நிறுவனங்களால் தூண்டப்படுவதால், இத்தொழில் நிறுவனங்களின் தலைமை பங்களிப்பை வெளிக்கொணர வேண்டும். எதிர்கால தொழில்கள் பல துறைகளுடன் தொடர்புடையதால், அதற்கான மேலாண்மை முறைமையை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author