அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை- போலீசார் எச்சரிக்கை

Estimated read time 0 min read

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

சென்னையில் மட்டும் 16,500 போலீசார், 1,500 ஊர் காவல்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்கள், தலா 2 தன்னார்வலர்கள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வரும் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நீர்நிலைகளில் காவல்துறை அனுமதித்த வழித்தடங்களில் ஊர்வலமாக கொண்டு சென்று கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மூலம் போலீசார் ரோந்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதியில்லை. கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

You May Also Like

More From Author