தென் கொரியா நாட்டில் பணியாற்றி வரும் இந்தியப் பெண் ஒருவர், அங்குள்ள கம்பெனி ஒன்றில் ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக வழங்கப்பட்டு வரும் விசித்திரமான மற்றும் ஆடம்பரமான பிட்னஸ் சலுகை குறித்த வீடியோவைச் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது, தற்போது இணையவாசிகளிடையே மாபெரும் அதிர்ச்சியையும் ஏக்கத்தையும் கிளப்பியுள்ளது.
வேலைப் பளு காரணமாக ஊழியர்கள் தங்களது உடலநலனைக் கோட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காக, தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் உடற்பயிற்சி செய்பவர்களுக்குச் சாமான்ய மக்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிலான மாபெரும் ஆடம்பரப் பொருட்களைக் கம்பெனியே பரிசாக வழங்குகிறது என்பது தான் இந்த வைரல் செய்தியின் பின்னணியாகும்.
தென் கொரியாவில் வசித்து வரும் மான்சி அரோரா என்ற அந்த இந்தியப் பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஊழியர்கள் தினமும் தங்களது பணி நேரத்திற்கு நடுவே அல்லது அதற்குப் பிறகு உடற்பயிற்சி செய்து, அதற்கான வீடியோ மற்றும் புகைப்பட சான்றுகளைத் தங்களது மேனேஜர் அல்லது டீம் லீடருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இப்படித் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் தங்களது பிட்னஸ் வழக்கத்தைத் தவறாமல் பின்பற்றி முcross பண்ணும் ஊழியர்களுக்குக் கம்பெனி தரப்பில் இருந்து வெறும் பாராட்டுச் சான்றிதழோ அல்லது சிறிய வவுச்சரோ வழங்கப்படுவதில்லை; மாறாக குச்சி, சேனல், பிராடா போன்ற சர்வதேச ஆடம்பர பிராண்டுகளின் விலை உயர்ந்த பொருட்கள் பரிசாகக் அள்ளிக் கொடுக்கப்படுகின்றன.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி தீயாய் பரவியதைத் தொடர்ந்து, இந்திய கார்ப்பரேட் ஊழியர்கள் பலரும் தங்களது ஆதங்கங்களை கமெண்ட் பகுதியில் கொட்டித் தீர்த்து வருகின்றனர். “நம்ம ஊரு ஆபீஸ்ல ஆன்-டைமுக்கு ஆபீஸை விட்டு கிளம்பி ஜிம்முக்கு போனாலே ஏதோ மாபெரும் குற்றம் செஞ்ச மாதிரி மேனேஜர் முறைப்பாரு! ஆனா அங்க ஊழியர்களோட ஹெல்த்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து லக்சுரி கிஃப்ட் எல்லாம் தர்றாங்கப்பா” என்று நெட்டிசன்கள் பலரும் ஆதங்கத்துடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘ ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தென் கொரிய நிறுவனம் கையாண்டுள்ள இந்த வித்தியாசமான யோசனை, தற்போது சர்வதேச அளவில் கார்ப்பரேட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
See this Instagram video by @browngirlsings https://t.co/zyXUojthDe
“>
