“சென்னையே காலியாயிடுச்சு!” – இரு நாட்களில் சொந்த ஊருக்கு படையெடுத்த 9 லட்சம் பேர்!

Estimated read time 1 min read

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு, கடந்த இரு நாட்களில் தீபாவளியை முன்னிட்டு ஒன்பது லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

நேற்று, குடும்பம் குடும்பமாக பலரும் கிளம்பியதால், பேருந்துகள், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. தவிர, ஜி.எஸ்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தீபாவளி நாளை கொண்டாட உள்ளதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால், கடந்த இரு நாட்களாக சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் மற்றும் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில், பயணியர் கூட்டம் அலைமோதியது.தாம்பரம், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில், வாகனங்களால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இரவில் பன்மடங்கு அதிகரித்து, வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்றன. இந்த தீபாவளியை முன்னிட்டு, மூன்று நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், ரயில்கள் மற்றும் சொந்த வாகனங்களில் இதுவரை ஒன்பது லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள், தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, குடும்பம் குடும்பமாக, இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், சென்னை விமான நிலையத்துக்கு, கடந்த இரண்டு நாட்களாக பயணியர் அதிகளவில் வந்து இறங்கியுள்ளனர்.வழக்கமாக 6,500 – 7,500 பேர் வரை வருவர். ஆனால் இம்முறை 8,500 – 9,000 பேர் வந்துள்ளதாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, அதிகமானோர் வந்துள்ளதாகவும், விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author