நேபாளத்தில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து – 7 பேர் பலி!

நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.  30 பேர் காயமடைந்தனர்.

நேபாளத்தில் பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தலைநகர் காத்மாண்டுவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து தடிங் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது.

இந்த பேருந்து, நெடுஞ்சாலையில் இருந்து விலகி, திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்த பயணிகள் பலர் நீருக்குள் மூழ்கினர். இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்புக் குழுவினர், பொதுமக்களின் உதவியுடன் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

More From Author