தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராணி தாய் சிரிகிட் (Queen Mother Sirikit) நீண்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அன்று பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93.
சனிக்கிழமை அன்று அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 17 ஆம் தேதி முதல் இரத்தத் தொற்று காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவர் மறைந்ததைத் தொடர்ந்து மன்னர் வஜிராலங்கார்ன் அரச குடும்பத்தின் சார்பில் இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி தாய் சிரிகிட், தாய்லாந்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார்.
தாய்லாந்து ராணி தாய் சிரிகிட் 93வது வயதில் காலமானார்
