மேகலாயா மர வேர் பால நாயகனுக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவம்….!! 

Estimated read time 1 min read

மேகலாயாவின் பாரம்பரியமிக்க “உயிருள்ள வேர்ப் பாலங்களை” பாதுகாத்து வளர்த்ததற்காக, பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹேலி வாருக்கு 2026-ஆம் ஆண்டிற்கான உயரிய “பத்மஸ்ரீ” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவரது பல தசாப்தகாலச் சேவையைப் பாராட்டி, நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மேகலாயாவின் கிழக்கு காசி மலைப் பகுதியில் பிறந்த ஹேலி வார், தனது 10 வயதிலேயே ரப்பர் மரங்களின் வேர்களைப் பிணைத்து பாலம் கட்டும் பாரம்பரியக் கலையைக் கற்கத் தொடங்கினார். மழைக்காலத்தில் ஆறுகளைக் கடக்க முடியாமல் கிராம மக்கள் பட்ட அவதியைப்போக்க, இயற்கையோடு இயைந்த முறையில் வேர்ப் பாலங்களை நெய்யும் இந்த சுதேசி தொழில்நுட்பத்தை இவர் தனது வாழ்நாள் முழுதும் தொடர்ந்து செய்து வருகிறார்.

பாக்கு, வெற்றிலை மற்றும் மிளகு விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்த ஹேலி வார், விளம்பர வெளிச்சம் இன்றி இக்கலையைத் தொடர்ந்து பாதுகாத்து வந்துள்ளார். இவர் உருவாக்கிய “உம்கார் வேர்ப் பாலம்” இன்றும் பல கிராம மக்களுக்குப் பாதுகாப்பான பாதையாகவும், மனிதனும் இயற்கையும் இணைந்து வாழ முடியும் என்பதற்குச் சிறந்த சான்றாகவும் திகழ்கிறது.

காலப்போக்கில் சிதையும் சாதாரணப் பாலங்களைப் போலல்லாமல், காலம் செல்லச் செல்ல மரங்கள் வளர்வதைப் போல மேலும் மேலும் உறுதியடையும் இந்த பாலங்களை உருவாக்குவதுடன், அடுத்த தலைமுறைக்கும் இந்த பாரம்பரிய அறிவைக் கற்றுக்கொடுத்து வருகிறார். சோஹ்ரா பீடபூமி பகுதியில் காடுகளைப் பாதுகாப்பதிலும் மரங்களை நடுவதிலும் இவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றார்.

At just 10 years old, Hailey War began learning how to build bridges from living tree roots after watching his family struggle to cross rivers every monsoon.

What started as a childhood lesson became a remarkable tradition of Meghalaya living root bridges that continue to grow… pic.twitter.com/H6NT6gvUzX

— 𝑺𝒂𝒏𝒅𝒉𝒚𝒂𝒂’𝒗 (@venus_twts) September 22, 2026

“>

நவீன சுற்றுச்சூழல் சவால்களுக்கு பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவே சிறந்த தீர்வு என்பதை உணர்த்தும் வகையில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பைப் போற்றும் ஹேலி வாரினுடைய இந்த சாதனை, உலகளவில் மேகலாயாவிற்குப் பெருமை சேர்த்து இணையத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author