ஆதார் கார்டில் பெயர் மாற்ற UIDAI வெளியிட்ட புதிய ரூல்ஸ்….  

Estimated read time 1 min read

இந்தியக் குடிமக்களின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. ஆதார் அட்டையில் உள்ள பெயர் மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் துல்லியமாகவும், பிற ஆவணங்களுடன் பொருந்தும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இதன் காரணமாக, ஆதாரில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதைத் திருத்துவதற்கான வாய்ப்பை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வருகிறது.

தற்போது ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கான விதிகளில் UIDAI சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய நடைமுறையின்படி, பெயர் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் எந்தெந்த வகைகளுக்கு என்னென்ன சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

பெயரில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகள், இனிஷியலை விரிவுபடுத்துதல், நடுப்பெயர் அல்லது குடும்பப் பெயரைச் சேர்த்தல் போன்ற சிறிய மாற்றங்களுக்கு, நபரின் அடையாளம் மாறாமல் இருக்கும் பட்சத்தில் உரிய அடையாளச் சான்றை சமர்ப்பித்துத் திருத்தம் செய்து கொள்ளலாம்.

ஆதார் எடுக்கும் போது வழங்கிய ஆவணங்களில் பெயர் சரியாக இருந்தும், தரவு உள்ளீட்டின் போது தவறு நடந்திருந்தால் அதற்குத் தனி நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி பெரியவர்கள் Annexure B படிவத்துடனும், பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் Annexure C படிவத்துடனும் உரிய அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

திருமணம் அல்லது விவாகரத்துக்குப் பிறகு பெண்கள் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால், Annexure D பத்திரத்துடன் அடையாளச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மாற்றம் திருமணத்தால் மட்டுமே செய்யப்படுகிறது என்பதையும், நபரின் அடையாளம் மாறவில்லை என்பதையும் இது உறுதி செய்கிறது. மிகச் சிறிய திருத்தங்களுக்கு ஆவணங்கள் எதுவும் தேவைப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author