சீன ஊடகக் குழுமம் தயாரித்த 10க்கும் மேற்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஆஸ்திரேலியா, கனடா, சிலி, இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 14 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 22 முக்கிய ஊடகங்களில் வழங்கப்பட்டுள்ளன. பண்பாடு பற்றிய ஷி ச்சின்பிங்கின் புரிந்துணர்வு, சீனாவின் நவீனமயமாக்கப் பாதை, உங்கள் குரல் உள்ளிட்டவை இந்த நிகழ்ச்சிகளில் இடம்பெறும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹெய்சியுங் உரை நிகழ்த்துகையில் பல்வேறு ஆசிய பசிபிக் நாடுகளுக்கிடையில் பண்பாட்டுத் துறை பரிமாற்றத்தை ஆழமாக்கும் வகையில் சீன ஊடகக் குழுமம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இது ஒன்றாகும் என்றார். பல்வேறு நாடுகளின் மக்கள் தலைவர் ஷி ச்சின்பிங்கின் ஆட்சிமுறையையும் புதிய யுகத்தில் சீனாவின் வளர்ச்சியையும், வளம் மிக்க சீனப் பண்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கு இந்த நிகழ்ச்சிகள் துணை புரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
