சர்வதேச சமூகம் மனித உரிமைகளைக் கூட்டாக பகிர்ந்து கொள்ள சீனா அழைப்பு

வளர்ச்சிக்கான உரிமை பற்றிய அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஐ.நா. பொது பேரவையின் 81ஆவது அமர்வில் செப்டம்பர் 23ஆம் நாள் நடைபெற்ற உயர்நிலை கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி சுன் லெய் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், சர்வதேச சமூகம் இந்த அறிக்கையை மன உறுதியுடன் செயல்படுத்தி, கூட்டாக வளர்ச்சி அடைந்து, மனித உரிமைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது புவி சார் மோதல்கள் உள்ளிட்ட சவால்கள் தீவிரமாகி வருகின்றன. இந்நிலையில் வளர்ச்சியை நனவாக்குவதற்கு, வளர்ச்சிக்கான உரிமையை உறுதியுடன் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை இணைந்து முன்னேற்றி, நியாயமான வளர்ச்சிக்கான சூழ்நிலையை உருவாக்கி, ஒற்றுமையுடன் சவால்களைச் சமாளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும், வளர்ச்சிக்கான சர்வதேச ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து ஆழமாக்கி, உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பின் நடைமுறையாக்கத்தை முன்னெடுத்து, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், உலகளாவிய தெற்கு பகுதி மற்றும் உலகின் நிலையான வளர்ச்சிக்கு வலிமையான இயக்காற்றலை ஊட்டி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author