சென்னை திருவான்மியூர் முதல் முதல் உத்தண்டி வரை, 4 கி.மீ., நீளத்திற்கு, சாலையின் மைய பகுதியில் நான்கு வழி உயர்மட்ட சாலை அமைக்க, நெடுஞ்சாலைத் துறை டெண்டர் கோரியுள்ளது.
சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இதில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., நீளம் உடையது. இடத்தைப் பொறுத்து, 60 முதல் 70 அடி அகலத்தில், நான்கு வழிச் சாலையாக உள்ளது. இந்த சாலையில், வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் விதமாக புதிய உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதை செயல்படுத்தும் விதமாக, கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி பகுதி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சுமார் 2,100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்தப்பாலம் அமைக்கப்பட்டால் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை செல்லவதற்கான பயண நேரம் 45 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறையும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம் ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக உயர்மட்ட சாலை அமைந்தால் இ.சி.ஆரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.