மாநில சட்டசபைகளால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு தொடர்பான முக்கிய அரசியல் சாசன வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அரசியல் சாசனத்தின் 143 வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரால் அனுப்பப்பட்ட இந்த வழக்கை, பத்து நாட்கள் விசாரித்து முடித்தது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் ஏப்ரல் 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது
