வில் வித்தையில் உலக சாதனையை உடைத்த இந்தியாவின் சீத்தல் தேவி…

Estimated read time 1 min read

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய நாட்டின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி. பெண்களுக்கான காம்பவுண்ட் எலிமினேஷன் சுற்றில் பங்கேற்ற அவர், 149 புள்ளிகளைக் குவித்து கடந்த 7 ஆண்டுகளாக இருந்த உலக சாதனையைத் தூள் தூளாக உடைத்தெறிந்து புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.

பிரி கோட்டிறுதிப் போட்டியில் சான் யுவென் என்பவரை எதிர்த்து விளையாடிய போதே ஷீத்தல் இந்த அபார சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு ஜெசிகா ஸ்டிராட்டன் வசம் இருந்த 148 புள்ளிகள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இதற்காக நடைபெற்ற தகுதிச்சுற்றில் 720-க்கு 704 புள்ளிகள் பெற்று உலக சாதனையைச் சமன் செய்ததோடு, புதிய ஆசிய சாதனையும் படைத்திருந்தார். மேலும், தோமன் குமாருடன் இணைந்து கலப்பு அணி சுற்றில் 1,402 புள்ளிகளைப் பெற்று மற்றொரு உலக சாதனையும் தன்வசப்படுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 19 வயதான ஷீத்தல் தேவி, பிறவியிலேயே கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். இருப்பினும், தனது உடல் குறைபாட்டைத் தடையாகக் கருதாமல், தனது கால்கள், தோள்கள் மற்றும் தாடையின் உதவியைக் கொண்டு மிகத் துல்லியமாக வில்வித்தை விளையாடி உலகையே வியக்க வைத்து வருகிறார். ஏற்கனவே பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், ஹங்ஷூ ஆசிய பேரா போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும் வென்ற இவரின் இந்தச் சாதனை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author