சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அளவில் அதிகரித்து ஒரு சவரன் 1,08,560 ரூபாய்க்கும் ஒரு கிராம் 35 ரூபாய் வரையில் உயர்ந்து 23,750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 14804 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,432 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
