டேட்டா இல்லாத புதிய ரீசார்ஜ் திட்டங்கள்.. ஏர்டெல் அறிமுகம்..!

Estimated read time 1 min read

மொபைல் டேட்டா தேவையில்லாமல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் 3 புதிய பிரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.185 திட்டத்தில் 28 நாட்கள், ரூ.203 திட்டத்தில் 30 நாட்கள், ரூ.206 திட்டத்தில் ஒரு காலண்டர் மாதம் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மூன்று திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், இலவச ஹலோ டியூன்ஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் நிறுவனங்கள் தற்போது டேட்டா வசதியுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளன. இதன்படி குறைந்த பட்ச கட்டணமே மாதம் ரூ.299-க்கு மேல் உள்ளது. இந்தியாவில் தொலைத்தொடர்பு துறை சேவையில் முன்னணி வகிக்கும் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்தும் இத்தகைய ரீசார்ஜ் திட்டங்களையே வைத்துள்ளன. அன்லிமிட்டெடு வாய்ஸ் கால் வசதியுடன் டேட்டாக்களுக்கு வரம்பும் கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, டேட்டா சேவையை பயன்படுத்த முடியாத சாதாரண செல்போன்கள் வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களும் கூட, டேட்டாவுக்கு என கட்டணம் கொண்ட ரீசார்ஜ் பிளானையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையை கொடுத்தது.

வெறும் வாய்ஸ் கால் வசதி மட்டும் வழங்கக் கூடிய ரீசார்ஜ் திட்டங்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளியிட வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான டிராய் -ம் இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, டிராய் அண்மையில் புதிய உத்தரவை பிறப்பித்தது. இதன்படி, மொபைல் டேட்டா வசதி இல்லாத, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை மட்டுமே கொண்ட சிறப்புக் கட்டண திட்டங்களை நிறுவனங்கள் வழங்க வேண்டும். குறுகிய காலத்திற்கான ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதற்கான காலக்கெடு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ரூ185, ரூ. 203, ரூ. 206 ஆகிய விலைகளில் புதிய பிரிபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மொபைல் டேடா தேவையில்லாமல் வெறும் வாய்ஸ் காலுக்காக மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த மூன்று திட்டங்களுமே வரம்பற்ற அழைப்புகள் பேச முடியும் என்றும் 300 மெசேஜ்களையும் அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.185 கொண்ட பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ரூ.203 ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். ரூ.206 திட்டத்திலும் வரம்பற்ற வாய்ஸ்கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் அனுப்ப முடியும்.

இந்தத் திட்டம் குறிப்பிட்ட 30 நாட்கள் என்ற காலக்கெடுவுக்குப் பதிலாக, காலண்டர் மாத அடிப்படையில் வேலிடிட்டி இருக்கும். அதாவது, ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் உள்ளதோ அதற்கு ஏற்ப வேலிடிட்டி மாறும். இந்த மூன்று ரீசார்ஜ் பிளான்களிலும் இலவச ஹலோடியூன்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த காலர் டியூனை வைத்துக்கொள்ள முடியும்.

Please follow and like us:

You May Also Like

More From Author