SIR பணி மூலம் 1.5 கோடி வாக்காளர்கள் பெயர் நீக்கம்: தேர்தல் ஆணைய நடவடிக்கையால் பரபரப்பு!

Estimated read time 0 min read

டெல்லி, ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், உத்தராகண்ட், ஆந்திரா, அருணாச்சல் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தெலங்கானா, பஞ்சாப், கர்நாடகா, மேகாலயா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், நாகலாந்து, திரிபுரா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் என மொத்தம் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்ட எஸ்ஐஆர் பணி நடைபெறுகிறது.

இந்த பணியின் கீழ் இதுவரை 12 மாநிலங்களுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் எஸ்ஐஆர் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ள 12 மாநிலங்களில் மொத்தம் 13,77,27,807 கோடி வாக்காளர்கள் இருந்துள்ளனர். அவர்களில் வசிப்பிடத்தில் இல்லாதவர்கள், இடம்பெயர்ந்து சென்றவர்கள், உயிரிழந்தவர்கள் என சுமார் 1,58,59,834 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மொத்தம் சதவீதம் சுமார் 11.51%.

அதிகபட்சமாக தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன் பகுதியில் சுமார் 29.64 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அருணாச்சல 19.09%, ஹரியானா 16.38%, சத்தீஸ்கர் 12.8%, மிசோரம் 5.2%, மணிப்பூர் 7.5%, உத்தராகண்ட் 10.39%, சண்டிகர் 12.8%, மேகாலயா 7.67%, ஜார்கண்ட் 16.48% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் 44.89 லட்சம் வாக்காளர்கள், ஹரியானாவில் 33.83 லட்சம் வாக்காளர்கள், ஒடிசாவில் 20.12 லட்சம் வாக்காளர்கள்,சிக்கிமில் 37,724 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நீதிமன்ற வழக்குகளை தொடுத்துள்ளது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author