தமிழகத்தில் நவ.,3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!

Estimated read time 0 min read

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் (அர்னாப்) வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (அக்டோபர் 28) அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம்கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது.

வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும். தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், காரைக்கால், புதுச்சேரி ஓரிரு இடங்களில் நேற்று (அக்டோபர் 28) முதல் நவ.,3ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நவ.,3ம் தேதி கனமழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author