#BREAKING ஒரு யூனிட் ரூ.41.50க்கு கொள்முதல்

Estimated read time 1 min read

வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 41.50 கொடுத்து வாங்க முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 2026 முதல் மே 2027 வரை, உச்சநேர மின் தேவையைச் சமாளிக்க 2,100 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ரூ. 41.50 என்ற விலையில் கொள்முதல் செய்ய TNEB திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய டெண்டரில் ஒரு யூனிட் ரூ. 37.50-க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது விலை ரூ. 4 அதிகரித்துள்ளது. கோடை வெப்பத்தை சமாளிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏன்? இதன் சுமை இறுதியில் மக்களைப் பாதிக்குமா? மின்சாரக் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை அவசியம் என நெட்டிசங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதத்திற்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37 என்ற விலையில் கொள்முதல் செய்வது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், திறந்த சந்தையில் மின்சாரத்தை வாங்குவதால் நாளொன்றுக்கு கூடுதலாக ரூ. 5 கோடி செலவாகும் என்று தெரிவித்தார். தற்போது மின்சார கொள்முதல் விலை ஒரு யூனிட்டிற்கு ரூ. 41.50 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தச் செலவு இன்னும் அதிகரிக்கக்கூடும்.

Please follow and like us:

You May Also Like

More From Author