கே.என்.நேரு வீட்டில் அதிரடி RAID…!!! 

Estimated read time 1 min read

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) விடிய விடிய அதிரடிச் சோதனை நடத்தி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்திற்கு இன்று (அக்டோபர் 29, 2026) காலை திடீரென வருகை தந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை செய்தி பரவியதைத் தொடர்ந்து, கே.என்.நேருவின் வீட்டின் முன்பாக ஏராளமான திமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் திரண்டதால் அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுப் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணியிடங்கள் நியமனம் செய்யப்பட்டதில் சுமார் ரூ. 634 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக எழுந்த ஊழல் புகார் தொடர்பாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கே.என்.நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தப் பச்சைக்கொடி காட்டிய நிலையில், இந்த அதிரடிச் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author