கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘பிகில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆனந்த் பாபு பேசிய பழைய மேடைப் பேச்சு ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது.
அந்த விழாவில் பேசிய அவர், “இன்னும் ஒரு நான்கு ஐந்து ஆண்டுகள் தான்; தளபதியின் இன்னொரு இளைய தளபதி வந்து கொண்டிருக்கிறார், இவரால் அதைத் தடுக்க முடியாது, மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்று அப்போதே மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.
மேலும், “அவர் வந்த பிறகு இவர் எங்கே இருப்பார் என்பதை நீங்களும் அவரும்தான் முடிவு செய்ய வேண்டும்; அப்போது இவரும் நம்மோடுதான் இருப்பார், ஆனால் என்னவாக இருப்பார் என்று நான் சொல்ல மாட்டேன்” என்று சுவாரசியமாகக் குறிப்பிட்டிருந்தார்.
விஜய்யின் அரசியல் வருகையையும் அவரது மாநாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ரசிகர்களும் நெட்டிசன்களும், ஆனந்த் பாபு அன்று மேடையில் கணித்துச் சொன்னது அப்படியே பலித்துள்ளதாக வியந்து கூறுகின்றனர்.
அன்றே கணித்தார் ஆனந்த் பாபு!!
#TVK #TVKVijay #CMJosephVijay #ThalapathyVijay https://t.co/css52Aup21
—
𝐕𝐢𝐣𝐚𝐲 𝐌𝐞𝐫𝐬𝐚𝐥𝐓𝐚𝐦𝐢𝐳𝐡𝐚𝐧
(@VJYMersalTamizh) October 28, 2026
“>
ஆண்டு பல கடந்திருந்தாலும், சினிமா மேடையில் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் தற்போதைய அரசியல் சூழலுக்கு கச்சிதமாகப் பொருந்துவதால், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.



