நவம்பர் 1 முதல் புதிய வருடாந்திர பாஸ் அமல்… – யார் யாருக்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Estimated read time 1 min read

சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோமீட்டர் சுற்ற ளவில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் வணிக நோக்கமற்ற சொந்த வாகனங்களுக்கு மாதம் ரூ.350 செலுத்தி டிஜிட்டல் முறையிலான ‘பாஸ்’களை பெற்று, புதுப்பித்து பயன்படுத்தி வருகின்றனர். சுங்கச்சாவடிகளை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் இந்த கட்டணத்தை புதுப்பிப்பதற்கு கடுமையான சிரமத்தை சந்திப்பதாக அவர்கள் நெடுஞ்சாலை ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்கும் வகையில் புதிய ‘பாஸ்டேக்’ அடிப்படையிலான வருடாந்திர ‘பாஸ்’ திட் டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான அரசிதழையும் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

நகராட்சி அல்லது நகர எல்லைக்கு வெளியே உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ரூ.1,500-ம், நகராட்சி அல்லது நகர எல்லைக்கு உள்ளே உள்ள சுங்கச்சாவடிக ளுக்கு ரூ.3,000-ம் வருடாந்திர கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. சுங்கச்சாவ டியை ஒட்டி 20 கிலோ மீட்டர் எல்லைக்குள் இருப்பவர்கள் தகுந்த ஆவணங்களை குறிப்பிட்ட சுங்கச்சாவடியில் சமர்ப்பித்து இந்த வருடாந்திர பாஸ் பெறலாம் என்று நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வருடாந்திர பாஸ் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது.சுங்கச்சாவடியின் அருகாமையில் சர்வீஸ் சாலை அல்லது மாற்றுப்பாதை இருக்கும்பட்சத்தில் உள்ளூர் மக்களுக்கான வருடாந்திர சலுகை பாஸ் வழங்கப்படாது என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author