தமிழ்நாட்டில் உள்ள கேளிக்கை பூங்காக்களில் (Amusement Parks) நிரந்தர ராட்சத ராட்டினங்களை (Permanent Giant Wheels) இயக்குவது தொடர்பாக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அனுமதிகளை பெறுவதற்கான நடைமுறையை எளிதாக்கும் வகையில், ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதற்கான இணையதளம் விரைவில் உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளைத் தவிர்க்கவும் இந்த புதிய நடைமுறைகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேளிக்கை பூங்காக்களில் ராட்சத ராட்டினம் இயக்க புதிய அரசாணை: சுற்றுலாத்துறையிடம் கட்டாய அனுமதி
