சீருடை பணியாளர் ஆக அருமையான வாய்ப்பு! – 300 இளைஞர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் பயிற்சி!

Estimated read time 1 min read

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை-05 ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் 2026-2027ஆம் ஆண்டிற்கான ஆறிவிப்பு எண்-31 இன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான பயிற்சியினை வழங்குவதற்காக, தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.

‘இலக்கு’, திட்டத்தின்கீழ், மாநிலம் முழுவதும் ஆர்வமுள்ள 300 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய இராணுவம் , கடற்படை, விமானப்படை, காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces – CAPFs) உள்ளிட்ட பல்வேறு சீருடைப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் இளைஞர்களுக்குத் தங்குமிட வசதியுடன் கூடிய தேர்வுப் பயிற்சி, உடற்தகுதி மற்றும் உடல் அளவீட்டுத் தேர்வுப் பயிற்சிகளை வழங்க வேண்டும். இத்தேர்வுப் பயிற்சியில் வகுப்பறைப் பயிற்சிகள், சந்தேகத் தீர்வு அமர்வுகள் மற்றும் தொடர் மாதிரித் தேர்வுகள் ஆகியவை இடம்பெற வேண்டும். மேலும், சீருடைப் பணிகளுக்கான தேர்வுகள், உடற்தகுதிகள், விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தேர்வு கால அட்டவணை குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், பயிற்சியில் பங்குபெறும் இளைஞர்களுக்கு இந்நிறுவனம் தரமான உணவு மற்றும் தூய்மையான தங்குமிட வசதிகளை வழங்க வேண்டும்.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள், நிறுவன தகுதி விவரங்கள் மற்றும் உரிய நிதி முன்மொழிவுப் படிவத்தை adw.director@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 11-ந் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தகவல்களுக்கு https://www.tnadw.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும் மற்றும் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: இரா.பேச்சிநாதன், கண்காணிப்பாளர் (7338801303) மற்றும் விஜய் (9344641478).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author