சென்னை டூ புதுச்சேரிக்கு படகு சேவை

Estimated read time 1 min read

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு படகு சேவையை தொடங்க தமிழ்நாடு கடல்சார் வாரியம் திட்டம்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், பயணிகளுக்குப் புதிய கடல்வழிப் பயண அனுபவத்தை வழங்கவும், சென்னையில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் வழியாகப் புதுச்சேரிக்கு சுற்றுலாப் படகு சேவையை (Ferry Service) அறிமுகப்படுத்தத் தமிழ்நாடு கடல்சார் வாரியம் (Tamil Nadu Maritime Board) திட்டமிட்டுள்ளது.

இந்தக் கடல்வழிப் படகு சேவையைத் திறம்பட இயக்கிப் பராமரிக்கத் தனியார் படகு சேவை நிறுவனங்கள் மற்றும் கடல்சார் சுற்றுலா அமைப்புகளிடம் இருந்து விருப்பக் கோரல் மனுக்களைத் (Expression of Interest – EoI) தமிழ்நாடு கடல்சார் வாரியம் வரவேற்றுள்ளது.

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்தச் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னை மற்றும் புதுச்சேரி இடையே பயண நேரத்தைக் குறைப்பதுடன், சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரும்.பயணிகள் கடல் வழியே சென்னை துறைமுகம் / கடற்கரைப் பகுதியிலிருந்து புறப்பட்டு, மாமல்லபுரத்தில் நின்று, புதுச்சேரியைச் சென்றடையும் வகையில் வழித்தடம் திட்டமிடப்படுகிறது.

விரைவில் இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்றும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்னை – புதுச்சேரி இடையே சொகுசாகக் கடல் வழி பயணம் மேற்கொள்வது சாத்தியமாகும் என்றும் தமிழ்நாடு கடல்சார் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author