பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

Estimated read time 0 min read

உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாரத் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளதாக தெரிவித்தார். எரிசக்தி பாதுகாப்பின் எதிர்காலம் தூய்மையான எரிசக்தியில்தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார். நமது மொத்த நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறனில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்கள் என்று குறிப்பிட்டார். சூரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பொறுத்தவரை, இந்தியா உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author