மங்கோலியத் தலைமை அமைச்சர் ஒயுன் ஏர்டன் அண்மையில் பெய்ஜிங்கில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டியில் சீன-மங்கோலிய ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவதற்கு அவர் எதிர்பார்ப்பு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தூதாண்மையுறவு குறித்து சீனா, வேற்றுமையில் நல்லிணக்கம் என்ற கருத்து கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றும் செயல், பாராட்டத்தக்கது. சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தின் வெற்றியான அனுபவங்கள், உலகளவில் கற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.