சிறை பாதுகாப்பு தொடர்பாக உயர்நிலை குழுவை அமைத்து முதலமைச்சர் விஜய் உத்தரவு

Estimated read time 1 min read

தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், சிறை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்கவும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திரிபாதி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பெறப்பட்ட கருத்துகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அண்மையில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை மாநிலத்தில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும், நாட்டின் பிற நடத்தவும், உள்ள பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உயர்நிலைக் குழுவிற்கு, தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் திரு. J.K. திரிபாதி, இ.கா.ப. (ஓய்வு) அவர்கள் தலைவராகவும், கூடுதல் காவல்துறை தலைவர்/சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தலைமை இயக்குநர் திரு. K. சங்கர், இ.கா.ப. மற்றும் சிறைத் துறையின் முன்னாள் துணைத் தலைவர் திரு. S. ராஜேந்திரன் (ஓய்வு) ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள். இந்த உயர்நிலைக் குழு, தமிழ்நாட்டில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு வழிவகுத்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு, சிறையின் பாதுகாப்பிற்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை ஆய்வு செய்யவும், தொழில்நுட்ப இடைவெளிகள் மற்றும் தற்போதைய பணிச்சுமைக்கேற்ப போதுமான அளவில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும், ஆய்வு செய்து, நாட்டின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும். இக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கும். சிறைச்சாலைகளின் பாதுகாப்பு போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், பணியில் கவனக்குறைவாக செயல்படும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author