கூட்டுறவு ஊழியர்களுக்கு 20% போனஸ்

Estimated read time 0 min read

கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அரசு முறைப்படி அறிவித்துள்ளது.

போனஸ் சட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அந்தந்த நிறுவனங்களின் உபரித் தொகையின் அடிப்படையில் அதிகபட்சமாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது.

அதேவேளையில், உபரித் தொகை இல்லாத கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சமாக 10 சதவீதம் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத மற்றும் நிகர லாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தலா 3,000 ரூபாய் சிறப்புத் தொகையாக வழங்கப்படும்.

மேலும், தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குத் தலா 2,400 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்படும் என்பதால் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author