சீன ஊடகக் குழுமமும், ரஷியாவுக்கான சீனத் தூதரகமும் கூட்டாக நடத்திய “சீனாவின் ஆட்சிமுறையும் உலகின் வளர்ச்சியும்” என்ற தலைப்பிலான உலகளாவிய கலந்துரையாடல் நவம்பர் 5ஆம் நாள் ரஷியத் தலைநகர் மாஸ்கோவில்நடைபெற்றது.
இந்நிகழ்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹைய்சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார். ரஷியாவுக்கான சீனத் தற்காலிக தூதர், ரஷியாவின் கூட்டாட்சிக் கவுன்சிலின் சர்வதேச விவகாரக் கமிட்டி தலைவர் முதலியோர் இதில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினர். அந்நாட்டின் அரசியல், தொழில் மற்றும் வணிகம், கல்வி, ஊடகம், பல்கலைக்கழகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டு, சீன ஆட்சிமுறையின் அனுபவங்கள் மற்றும் சீன-ரஷிய ஒத்துழைப்புகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
ஷென் ஹைய்சியோங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், உலகக் கவனத்தை ஈர்த்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு அண்மையில் பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. புதிய யுகத்தில் கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியில் பெறப்பட்டுள்ள சாதனைகளும் அனுபவங்களும் இதில் தொகுத்துக் கூறபட்டன. மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கதைகளைச் சீன ஊடகக் குழுமம் தொடர்ந்து செவ்வனே விளக்கிக் கூறும் எனக் குறிப்பிட்டதோடு, ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் பற்றிய தலைசிறந்த நிகழ்ச்சிகளைத் தயாரித்தல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சுய ஆட்சி, சீனாவின் ஆட்சிமுறையை மேம்படுத்தும் நடைமுறையாக்கம் ஆகியவை சார்ந்த பணிகளும் இதன் மூலம் மேலும் சீராக பரவல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
