அல்ஜீரியா அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

அல்ஜீரியா அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்ற அப்டேல்மட்ஜிட் டேப்போனுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 11ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.


ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தியில் கூறுகையில், சீனாவும் அல்ஜீரியாவும் பாரம்பரிய நட்புறவை நிலைநிறுத்தி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், இரு நாட்டுறவு விரைவாக வளர்ந்து, பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு அதிக சாதனைகளைப் பெற்றுள்ளதோடு, சர்வதேச விவகாரங்களில் இரு தரப்பும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை நெருக்கமாக்கி வருகின்றன.

சீன-அல்ஜீரிய உறவின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறேன். உங்களுடன் இணைந்து, இவ்வாண்டு சீன-அல்ஜீரிய பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்டதன் 10ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, இரு தரப்புகளின் பரஸ்பர அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாடுகளின் நட்பார்ந்த ஒத்துழைப்புக்கான மேலும் பரந்துபட்ட எதிர்காலத்தைக் கூட்டாக திறந்து வைக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.

You May Also Like

More From Author