கியூபா காரணமாக, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் நவம்பர் 7ஆம் நாள் கூறுகையில், மூன்றாவது தரப்புடன் தொடர்புடையதை காரணமாக கொண்ட அமெரிக்கா, சீன நிறுவனங்கள் மீது ஒருதலைப்பட்சமான தடை விதிப்பது, சர்வதேச சட்டத்துக்கும் சர்வதேச உறவுகளின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் மாறாகச் செயல்பட்டுள்ளது. சீனா இதனை உறுதியுடன் எதிர்க்கின்றது என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அண்மையில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான தனது தடைகள் மற்றும் அடக்குமுறைகளை தீவிரமாக்கி, பாகுபாடுடைய கட்டுபாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது, சீன நிறுவனங்களின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு கடும் சேதம் ஏற்படுத்தியுள்ளதோடு, இரு நாட்டு அரசுத்தலைவர்கள் எட்டியுள்ள ஒருமித்த கருத்துக்களுக்கும் புறம்பானது என்று தெரிவித்தார். அமெரிக்கா தனது தவறான செயல்களை கூடிய விரைவில் திருத்திக்கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது என்றும், தனது நியாயமான உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதற்காகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையையும் சீனா கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
