IDFC வங்கியில் ரூ.590 கோடி மோசடி செய்த 4 முக்கிய குற்றவாளிகள் கைது  

Estimated read time 1 min read

ஹரியானா மாநில அரசின் ‘முதலமைச்சர் கிராமப்புற வீட்டு வசதித் திட்டம் 2.0’ நிதியில் நடைபெற்ற பிரம்மாண்ட மோசடி தொடர்பாக, ரிபவ் ரிஷி தலைமையிலான நான்கு பேர் கொண்ட கும்பலை ஹரியானா மாநில லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்துள்ளது.
அவர்களில் இருவர் முன்னாள் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி அதிகாரிகள், மற்றவர்கள் ஒரு கூட்டு நிறுவனத்தை நடத்தும் தனியார் நபர்கள். ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் முன்னாள் மேலாளரான ரிஷி, தற்போது சண்டிகரில் உள்ள ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் பணிபுரிகிறார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மோசடிக்கு பின்னால் இருந்த முக்கிய நபரை எப்படி கைது செய்தது என தற்போது தகவல் வெளியிட்டுள்ளனர் அதிகாரிகள்.

You May Also Like

More From Author