புதன்கிழமையன்று குவைத்தின் மங்காப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மலையாளிகள் உட்பட 41 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குவைத்தின் தெற்கு அஹ்மதி மாகாணத்தில் உள்ள மங்காப் நகரில் இருக்கும் கட்டிடத்தில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்தக் கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இறந்தவர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற போது கட்டிடத்தில் சிக்கிய பலர் பலத்த காயம் அடைந்தனர்.
குவைத்: தமிழர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் 41 பேர் பலி
