தீபாவளிப் பண்டிகையையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லத்தின் முன்பு திரண்ட ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதை ரஜினிகாந்த் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், தீபாவளி திருநாளான இன்று, அவரைச் சந்திப்பதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர்.
இதையடுத்து, இல்லத்திலிருந்து வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தங்களின் அபிமான நடிகரை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
