ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’, எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ சாதனையை முறியடித்து, உலக அளவில் அதிக வசூல் செய்த 2-வது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
திரையரங்குகளில் வெளியாகி 46 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இப்படம் உலகளவில் ₹1,788.36 கோடி வசூல் செய்துள்ளது.
உள்நாட்டு வசூலில் பாலிவுட்டின் அனைத்து கால சாதனைகளையும் முறியடித்து, இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த பாலிவுட் படமாக உருவெடுத்துள்ளது.
பாகுபலி 2 சாதனையை முறியடித்த துரந்தர் 2! இந்திய திரையுலகின் புதிய வசூல் அரசன்!
