பிரபல ஹாலிவுட் ஜோடி ஜெனிபர் லோபஸ் மற்றும் பென் அஃப்லெக் விவாகரத்து  

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ், அவரது கணவர்-நடிகர் பென் அஃப்லெக்கிடம் இருந்து விவாகரத்து கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 20 அன்று மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த ஜோடி கடந்த 2022 இல் திருமணம் செய்து கொண்டது.
திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் அவர்கள் அதை விட்டு வெளியேற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக, இவர்களது பிரிவினை குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் விவாகரத்து தொடர்பான அறிக்கையை இந்த நட்சத்திர தம்பதி இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை .

Please follow and like us:

You May Also Like

More From Author