பொங்கல் திருநாள் நெருங்கிவிட்ட வகையில், அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையின்படி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஜனவரி 8, 2026 அன்று சென்னையில் இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அன்றைய தினமே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கும்.
இந்த ஆண்டு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 8இல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
