தமிழகம், புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்  

Estimated read time 1 min read

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பர் 22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், அது வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 24இல் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அதன் பின்னர், மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author