2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தியென்ஜின் உச்சிமாநாட்டிலும் சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியிலும் பங்கேற்க சீனாவுக்கு வருகை தந்த ரஷிய அரசுத் தலைவர் புதினை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்தித்துப் பேசினார்.
சீனா மற்றும் ரஷிய அரசுத் தலைவர்கள், பிற தரப்பு நாடு நடத்திய உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 2ஆம் உலகப் போரில் முக்கிய வெற்றி நாடாகவும் ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாகவும் விளங்கிய பெரிய நாடுகளின் பொறுப்பேற்பை இது வெளிக்காட்டியுள்ளது. மேலும், 2ஆம் உலகப் போரின் சாதனைகள் மற்றும் சரியான வரலாற்றுக் கருத்துக்களைப் பேணிக்காப்பதற்கான மனவுறுதியையும் இது காட்டியுள்ளது என்று பேச்சுவார்த்தையின் போது ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
மேலும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.