கோடம்பாக்கம் – தாம்பரம் ரயில் நிலையம் இடையே, பராமரிப்புப் பணி காரணமாக, 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் வசதிக்காக 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கோடம்பாக்கம் – தாம்பரம் ரயில் நிலையம் இடையே, இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை – அரக்கோணம் இடையே, இயக்கப்படும் மின்சார ரயில்கள் மற்றும் தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் என மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக, 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நீல மற்றும் பச்சை வழித்தடங்களில், நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை, வழக்கமாக இயக்கப்படும் மெட்ரோ ரயில்களுக்கு பதிலாக, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, 7 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
காலை 5.00 மணி முதல் 10.00 மணி வரை மற்றும் இரவு 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை, வழக்கமான ஞாயிறு அட்டவணையின்படி, 10 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை ஒவ்வொரு 15 நிமிட இடைவேளையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.