முன்னாள் ஜப்பானிய தலைமையமைச்சர் யசோ புஃகுதாவின் மறைவுக்காக, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் யசோ புஃகுதாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் செய்தி அனுப்பி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த இரங்கல் செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், திரு. யசோ புஃகுதா ஒரு நம்பகமான மற்றும்பொறுப்புணர்வு வாய்ந்த அரசியல்வாதி ஆவார் என்றும், சீன மக்களின் நீண்டகால நண்பராக இருந்தார் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார். அவர் நீண்டகாலமாக சீனா-ஜப்பான் நட்புறவை மனதில் கொண்டு, சரியான வரலாற்றுப் பார்வையைக் கடைப்பிடித்தார். அவரது பதவிக்காலத்தில், சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நான்காவது அரசியல் ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டார். இது, இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கான முக்கியக் கோட்பாடுகளைத் தெளிவுபடுத்தியது.
சீனா-ஜப்பான் உறவுகளுக்கும் ஆசிய வளர்ச்சிக்கும் திரு. யசோ புஃகுதா ஆற்றிய பங்களிப்புகளை சீனா நினைவில் வைத்திருக்கும் என்றும், ஜப்பானிய அதிகாரிகள், மூத்த தலைமுறை அரசியல்வாதிகளின் கடின உழைப்பையும் முயற்சிகளையும் பேணிமதித்து, சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நான்கு அரசியல் ஆவணங்களைக் கடைப்பிடித்து, இருதரப்பு உறவுகளின் அரசியல் அடித்தளத்தை உண்மையாகப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
