முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Estimated read time 0 min read

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் திரண்டு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

நமது ஜனநாயகத்தை மேலும் உயிர்த்துடிப்புள்ளதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் வகையில், இன்று வாக்களிக்கும் அனைவரும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான எண்ணிக்கையில் திரண்டு தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, மேற்கு வங்கத்தின் பெண்கள் மற்றும் இளைஞர் சக்தி பெருமளவில் திரண்டு, தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

You May Also Like

More From Author