ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நீலிக்கொல்லை, ரெட்டிதோப்பு, ஸ்ரீராம்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கியது.
குறிப்பாக, ரெட்டிதோப்பு ரயில்வே பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
