– கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு அதிகம்? வெளியான வேட்பாளர் பரிசீலனைத் தகவல்களால் பரபரப்பு…!!” 

Estimated read time 1 min read

சென்னையின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு, செப்டம்பர் 9-ஆம் தேதி கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 70 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், நவம்பர் 20-ஆம் தேதி மதியம் 2:24 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு தனது 75-வது வயதில் காலமானார்.

இவரது மறைவைத் தொடர்ந்து காலியாகியுள்ள கொளத்தூர் தொகுதிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது மார்ச் மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் களமிறங்க உள்ளதால் நான்கு முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலினை வீழ்த்தி வி.எஸ். பாபு வெற்றி பெற்ற நிலையில், தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக வென்ற இந்த விஐபி தொகுதியில் வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை இருப்பதால், கட்சியின் முக்கிய நிர்வாகியான கனிமொழி, பகுதிச் செயலாளர்களான நாகராஜன் மற்றும் ஐசிஎஃப் முரளி, மேயர் பிரியா மற்றும் மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட சந்தான கிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல், நாம் தமிழர் கட்சியும் கொளத்தூர் இடைத்தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதால், அந்தக் கட்சியின் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் மறைவால் ஏற்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலில், தவெக, திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு கட்சிகளும் களம் காண உள்ளதால் கொளத்தூர் தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author