புதன் பெயர்ச்சியால் சிக்கலில் மாட்டும் 6 ராசிகள்: ஜோதிட எச்சரிக்கை…!!! 

Estimated read time 1 min read

நவக்கிரகங்களில் புத்தி கூர்மை, பேச்சுத்திறமை, வியாபாரம் மற்றும் கணக்கு வழக்கிற்கு அதிபதியாகத் திகழும் புதன் பகவான், வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குக் பெயர்ச்சியாகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலுமே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், குறிப்பாக 6 ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று ஜோதிட வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்கு புதன் செல்வது, உணர்ச்சிப்பூர்வமான முடிவுகளையும் தேவையற்ற மனக்குழப்பங்களையும் தரக்கூடும் என்பதால் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

புதனின் இந்த பெயர்ச்சியால் மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய 6 ராசியினர் தொழில், நிதி மற்றும் பேச்சு விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். பேச்சுக்கு அதிபதியான புதன் உணர்ச்சி வசப்படக்கூடிய கடக ராசியில் பயணிப்பதால், தேவையற்ற வாக்குவாதங்கள், தவறான புரிதல்கள் மற்றும் சொல்லால் வரும் குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், நிதி விவகாரங்களில் அவசரப்பட்டு புதிய முதலீடுகளைச் செய்வதையோ அல்லது யாருக்கும் பிணை நை நிற்பதையோ முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பதும், ஆவணங்களில் கையெழுத்திடும் முன் நன்கு படித்துப் பார்ப்பதும் மிகவும் நல்லது.

இந்த காலகட்டத்தில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளிலிருந்து தப்பித்து சுப பலன்களைப் பெற, பாதிக்கப்பட்ட ராசியினர் சில எளிய பரிகாரங்களைச் செய்வது நன்மையளிக்கும். தினமும் அல்லது புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவதும் புதன் பகவானின் நல்அருளைப் பெற்றுத் தரும்.

மேலும், புதன்கிழமைகளில் பசுக்களுக்குப் அகத்திக்கீரை அல்லது பச்சைப்பயறு வழங்குவதும், ஏழை மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களை தானமாகத் தருவதும் கிரக தோஷங்களைக் குறைத்து, வாழ்க்கையில் வரவிருக்கும் சோதனைகளிலிருந்து முன்கூட்டியே பாதுகாப்பை வழங்கும்.

You May Also Like

More From Author