பெரு நாட்டு அரசுத் தலைவர் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி

Estimated read time 1 min read

33வது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம் அண்மையில் சீனாவின் ஷென்சென் மாநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கெற்ற பெரு நாட்டு அரசுத் தலைவர் கெய்கோ ஃபுஜிமோரி அம்மையார் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். ஏபெக் அமைப்பின் முக்கியத்துவம் பற்றி அவர் கூறுகையில், ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மிகவும் முக்கியமானது. இந்த அமைப்பில் 21 பொருளாதாரங்கள் உள்ளன. பெருவைப் பொறுத்தவரை, அவற்றுடனான வர்த்தகம், வெளிநாட்டு வர்த்தக அளவில் 60-65 விழுக்காடை வகித்துள்ளது. இந்நிலையில், ஏபெக் ஒரு கூட்டம் மட்டுமல்லாமல், பெருவின் முக்கிய வாய்ப்பாகவும் திகழ்கிறது என்றார். மேலும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்குடன் நடத்திய சந்திப்பில், மிகவும் பயனுள்ள சாதனைகள் பெறப்பட்டுள்ளன. ஒன்று மற்றதன் புரிந்துணர்வும் ஆழமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவுக்கும் பெருவுக்கும் இடையிலான இரு தரப்புறவு குறித்து அவர் கூறுகையில், இரு நாட்டுறவு மிகவும் முக்கிய கட்டத்தில் உள்ளது. தென் அமெரிக்காவில் சீனாவுடன் தூதாண்மை உறவை நிறுவிய 2வது நாடாக பெரு திகழ்கிறது. இரு தரப்புறவு மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்குவதற்கும், பண்பாட்டுப் பரிமாற்றத்தை நடத்தி, முதலீடு மற்றும் தொழில்மயமாக்கத்தில் ஒன்றுக்கொன்று ஆதரவளிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author