பாஜகவில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல்; ஓபிசி மோர்ச்சா தேசிய செயற்குழுவில் புதிய பொறுப்பு!

Estimated read time 1 min read

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்துள்ளார். அத்துடன், அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவான ஓபிசி மோர்ச்சாவின் (OBC Morcha) தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், ஓபிசி மோர்ச்சாவிற்கான புதிய நிர்வாகிகள் நியமனத்தின் ஒரு பகுதியாக சுழற்பந்து வீச்சாளர் சாஹலை இந்தப் பொறுப்பிற்கு நியமித்துள்ளார்.

டெல்லி சார்பில் பிரதிநிதித்துவப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படும் சாஹல், முன்னதாக ஓபிசி மோர்ச்சாவின் தேசியத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர் பால் மௌரியாவைச் சந்தித்துப் பேசினார்.

அமர் பால் மௌரியா கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக மேலும் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஒடிசாவைச் சேர்ந்த பேராசிரியர் அத்வைத் சரண் கடநாயக் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சீமா சம்ரித்தி குஷ்வாஹா ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author