அக்டோபர் திங்களில், புதிய உந்து சக்திகளின் வலுவான ஆதரவுடன், சீனத் தொழில்துறை உற்பத்தியின் பொதுவான நிலைமை நிதானமாக இருந்து, தொழில்துறை சார் பொருளாதாரம், புதிய, சிறந்த மற்றும் நேர்மறையான திசையை நோக்கி தொடர்ந்து வளர்ந்து வருகின்றது.
அக்டோபர் திங்களில் சீனத் தொழில்துறை உற்பத்தி ஒப்பீட்டளவில் விரைவான வளர்ச்சியைப் பராமரித்தது. இதில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய உயர் தொழில்நுட்ப ஆக்கத்தொழில் துறையின் கூடுதல் மதிப்பு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 17.6விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது. அதன் அதிகரிப்பு வேகம், கடந்த செப்டம்பர் திங்களை விட 2.3சதவீதப் புள்ளிகள் உயர்ந்தது. இது, கடந்த 5ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும்.
தயாரிப்புகளைப் பொறுத்தவரை, கடந்த அக்டோபரில், சீனாவின் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளின் உற்பத்தி அளவு 21.9விழுக்காடும், தொழில்துறை சார் இயந்திர மனிதர்களின் உற்பத்தி அளவு 26விழுக்காடும் அதிகரித்தன. மேலும், முப்பரிமாண அச்சிடும் கருவிகளின் உற்பத்தி அளவு 85.9விழுக்காடு அதிகரித்து, கண்களை ஈர்க்கும் சாதனையை பெற்றது.
